ஆக. 30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

dinamani2Fimport2F20232F72F272Foriginal2Fadmk
Spread the love

பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 30ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 30.8.2025 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

It has been announced that a meeting of AIADMK district secretaries will be held on Aug. 30th.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *