“ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா?” – திருச்சி வேலுசாமி காட்டம்! |”Is the Congress to blame for the English or the Dravidian movement?” – Trichy Velusamy

Spread the love

அக்குடும்பத்தைச் சேர்ந்த, பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர் இந்தியிலேயே படித்து, பட்டம் பெற்றிருக்கிறாரா, இல்லையா?

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அப்போது எப்படி இவர் இந்த இளம் வயதிலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என அப்போதைய முதல்வரிடம் கேட்டபோது ‘அவனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாகத் தெரியும்.

அதனால் அவனுக்கு அங்கு மரியாதை இருக்கிறது’ எனச் சொன்னாரா இல்லையா? இந்தி இங்கு ஆட்சிமொழியாக வராமல் தடுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சீவி ரெட்டிதான்.

திருச்சி வேலுசாமி

திருச்சி வேலுசாமி

அப்போது ஆட்சிமொழி எதுவாக இருக்க வேண்டும் என வாக்கெடுப்பு நடக்கும்போது, இந்திக்குத்தான் சமமான வாக்குகள் வருகின்றன.

அப்போது சஞ்சீவி ரெட்டி இந்தி மொழிக்கு எதிராக வாக்குப் போட்டதால்தான் அப்போது அது தடுக்கப்பட்டது. 1967 வரை தமிழகப் பள்ளிகளில் தமிழ்தான் பாடமொழியாக இருந்தது.

அதற்குப் பின் வந்த ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா? அப்போது தமிழ் மொழிக்காகப் பல சாதனைகளைச் செய்வதற்கு காமராஜர் காரணமாக இருந்தார்.

1972-ல் காமராஜர் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். அப்போது அவர் இடையிடையே நிறுத்திச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைத் தடுத்த வக்கிரப் புத்தியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *