லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார்.
ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.10) லாவோஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.