ஆசிய கபடியில் தங்கம் வென்ற அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர், துணை முதல்வர் பாராட்டு | CM stalin wishes Kannagi nagar karthika

Spread the love

சென்னை: ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற கபடி வீரர்​கள் அபினேஷ் மற்​றும் கார்த்​தி​கா​வுக்கு தலா ரூ.25 லட்​சம் ஊக்​கத்​தொகையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

பஹ்ரைன் நாட்​டின் ரிப்பா நகரில் அமைந்​துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்​டி​யில் ஆசிய இளை​யோர் விளை​யாட்டு போட்​டிகள் கடந்த அக்​.19 முதல் 23-ம் தேதி வரை நடை​பெற்​றது. வரலாற்​றில் முதல்​முறை​யாக கபடி விளை​யாட்டு இந்த போட்​டிகளில் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

அதன் சுற்​றுப்​போட்டி தொடரில் 7 நாடு​கள் பங்​கேற்​றன. இறு​திப்​போட்​டிக்கு முன்​னேற 7 அணி​களும் ரவுண்ட் ராபின் வடிவத்​தில் போட்​டி​யிட்​டன. இதில் ஆண், பெண் இரு பிரிவு​களி​லும் இந்​தியா முதலிடத்தை பிடித்​தது. இந்​திய அணி​யின் வெற்​றிக்கு தமிழகத்​தின் திரு​வாரூரைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்​தாஸ் (ஆண்​கள் பிரிவு) மற்​றும் சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்த கார்த்​திகா ரமேஷ் (பெண்​கள் பிரிவு) ஆகியோர் முக்​கிய காரண​மாக திகழ்ந்​தனர். இதில் கண்​ணகி நகர் கார்த்​தி​கா, தேசிய அளவி​லான கேலோ இந்​தியா உள்​ளிட்ட போட்​டிகளில் மொத்​தம் 11 முறை தமிழகத்​துக்​காக விளை​யாடி அதில் 8 பதக்​கங்​களை வென்​றவர். இளை​யோர் பெண்​கள் இந்​திய கபடி அணி​யின் துணை அணித் தலை​வ​ராக​வும் செயல்​பட்​டுள்​ளார்.

இவர்​களின் சாதனையை அங்​கீகரிக்​கும் வகை​யில், சென்னை திரும்​பிய இரு​வரை​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அழைத்து தலா ரூ.25 லட்​சத்​துக்​கான காசோலைகளை வழங்​கி​னார். தொடர்ந்து முதல்​வரின் உத்​தர​வின்​படி உயரிய ஊக்​கத்​தொகை​யாக ரூ.15 லட்​ச​மும், தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை​யில் இருந்து கூடு​தலாக ரூ.10 லட்​ச​மும் வழங்​கப்​பட்​டது. ​நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநி​தி, விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாதரெட்​டி, பயிற்​சி​யாளர்​கள்மா.​ராஜேஷ், மா.​நாக​ராஜன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

தமிழகம் பெருமை கொள்​கிறது: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில், “கண்​ணகி நகர் கார்த்​தி​கா​விடம், கண்​ணகி நகருக்கு நான் சென்​ற​போதெல்​லாம் அங்கு வசிக்​கும் மக்​கள் என்​னிடம் வைத்த கோரிக்​கைகளை எல்​லாம் நிறைவேற்​றித் தர உத்​தர​விட்​டிருந்​ததை நினை​வு​கூர்ந்​து, ‘உங்க ஏரி​யா​வில் இப்ப பிரச்​சினை​கள் தீர்ந்​திருக்​கா?’ என்று கேட்​டேன். கடந்த 4 ஆண்​டு​களில் பெரு​மள​வில் கண்​ணகி நகர் முன்​னேறி​யிருப்​ப​தாக புன்​னகையோடு சொன்​னார்.

கார்த்​திகா மற்​றும் அபினேஷ் ஆகியோர் மேலும் சில உதவி​களை என்​னிடம் கேட்​டிருக்​கிறார்​கள். அவற்​றை​யும் நிறைவேற்​றித் தரு​வோம். பைசன் திரைப்​படத்​தில் கண்ட மணத்தி கணேசன் தொடங்​கி, இன்று அபினேஷ், கார்த்​திகா வரை எளிய பின்​புலங்​களில் இருந்து சா​திக்​கும் ஒவ்​வொரு வீரரின் வெற்​றி​யிலும் சமூகநீதி மண்​ணான தமிழகம்​ பெரு​மை கொள்​கிறது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *