ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, தலைவராக இலங்கையின் ஷம்மி சில்வாக்குப் பின்னர், மோஷின் நக்வி பதவியேற்றுக் கொண்டார். ஆசிய கிரிக்கெட் வாரியத்துக்கான தலைவருக்கான பதவி சுழற்சி முறையில் மாற்றப்படுகிறது.
இதனால், புதிய தலைவராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2027 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்வி தலைமையில் ஆசியக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை ஆகியவை நடத்தப்படவுள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவிலும், வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடர் வங்கதேசத்திலும் நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.