இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை (செப்டம்பர் 14) துபையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் சைம் ஆயுப் தெரிவித்துள்ளார்.