ஆட்டம் ஆரம்பமான முதல் நிமிஷத்திலேயே இந்திய வீராங்கனை நவ்நீத் கௌர் பெனால்ட்டி ஷீட் அவுட் வாய்ப்பை கோல் ஆக மாற்றி அணியை முன்னிலைப்படுத்தி சீன வீராங்கனைகளுக்கு கிலியை உண்டாக்கினார்.
எனினும், அதன்பின் சுதாரித்து ஆடிய சீன வீராங்கனைகள் ஆட்டத்தின் 21, 41, 51 மற்றும் 53-ஆவது நிமிஷங்களில் கோல் மழை பொழிந்து ஆசிய கோப்பையை தங்கள் வசமாக்கினர்.
இதன்மூலம், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.