இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ்பக்கத்தில் அவரது பதிவிட்டுள்ள பதிவில்: திமுக அரசின் பொம்மை முதல்வர் திரு. @mkstalin 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
“சம வேலைக்கு சம ஊதியம்” என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே!. ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
ஐடிவிங் : எடப்பாடி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், இன்று (26.12.2025- வெள்ளிக்கிழமை), கட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களை நேரில் சந்தித்து, கழக மாவட்ட வாரியாக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்சப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் @AIADMKITWINGOFL செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தங்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கினார்.
