சென்னை: பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு டெட் தேர்வு நாளை (நவ.15) தொடங்குகிறது.
முதல் நாளில் டெட் தாள்-1 தேர்வும், 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தாள்-2-ம் நடைபெற உள்ளன. தாள்-1 தேர்வில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர், தாள்-2-ல் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 808 பேர் கலந்து கொள்கின்றனர். தாள்-1-க்கு 367 தேர்வு மையங்களும், தாள்-2-க்கு 1,241 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.