ஆடித் திருவிழா: பெரியபாளையம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Dinamani2f2024 08 092ff1bzcnkv2fbus.jpg
Spread the love

ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சனி, ஞாயிற்று ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில், ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெரியபாளையத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்கள் 514, 592, 57X, 547, 580 ஆகியவற்றில் நாளை (10.08.2024) மற்றும் ஞாயிறு (11.08.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதே போல், இந்த ஆண்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கிய திருவிழா, தொடா்ந்து 14 வாரங்கள் நடைபெற உள்ளது.

இதில் ஆடி மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தங்கியிருந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *