ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2026 காலண்டர் உற்பத்தி தொடக்கம்: ஆர்டர்கள் அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி | 2026 calendar production begins in Sivakasi on the occasion of Aadi Perukku

1371797
Spread the love

சிவ​காசி: ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது.

சட்​டப்​பேரவை தேர்​தல் வர உள்​ள​தால் அரசி​யல் கட்​சிகளின் ஆர்​டர்​கள் அதி​கம் வரு​வ​தால் உற்​பத்​தி​யாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். சிவ​காசி​யில் பட்​டாசு மற்​றும் தீப்​பெட்டி தொழிலுக்கு அடுத்​த​படி​யாக அச்​சுத்​தொழில் பிர​தான​மாக உள்​ளது. சிவ​காசி​யில் உள்ள 150-க்​கும் அதி​க​மான அச்​சகங்​களில் நோட்​டுப் புத்​தகங்​கள், டைரி​கள், காலண்​டர்​கள் ஆகியவை தயாரிக்​கப்​படு​கின்​றன. இதில் 50-க்​கும் அதி​க​மான அச்​சகங்​கள் பிரத்​யேக​மாக காலண்​டர் தயாரிப்​பில் மட்​டும் ஈடு​பட்​டுள்​ளன.

இங்கு ஆண்டு தோறும் ஆடிப்​பெருக்கு தினத்​தில் சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டு, அடுத்த ஆண்​டுக்​கான காலண்​டர் ஆல்​பம் வெளி​யிடப்​படு​வது வழக்​கம். அதன்​படி நேற்று ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை நடத்​தப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்​டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது.

ரூ.25 முதல் ரூ.2,500 வரை பல்​வேறு வடிவங்​களில் தினசரி காலண்​டர்​கள், மேஜை காலண்​டர்​கள், மாத காலண்​டர்​கள் என 350-க்​கும் மேற்​பட்ட வடிவங்​களில் காலண்​டர்​கள் தயாரிக்​கப்பட உள்​ளன. 2026-ல் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரு​வ​தால் அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​கள் வடிவி​லான ‘டை கட்’ காலண்​டர்​கள் அதிகமாக உற்​பத்தி செய்​யப்பட உள்​ளது. தமிழ், மலை​யாளம், தெலுங்​கு, கன்​னடம் உள்​ளிட்ட மொழிகளி​லும் காலண்​டர்​கள் அச்​சிடப்​படு​கின்​றன.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு அரசி​யல் கட்​சிகளின் நிர்​வாகி​கள் காலண்​டர்​களை அதிக அளவில் வாங்க ஆர்​வம் காட்டி ஆர்​டர்​களை அளித்து வரு​கின்​றனர். இதனால், உற்​பத்​தி​யாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். இது குறித்து காலண்​டர் உற்​பத்​தி​யாளர்​கள் கூறுகை​யில், “1996 முதல் 2017-ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்​கப்​பட்ட பொருட்​கள் பட்​டியி​லில் காலண்​டர் இருந்​தது. ஜி.எஸ்​.டி. வரி அமல்​படுத்​தப்​பட்​ட​போது காலண்​டருக்கு 12 சதவீதம் வரி விதிக்​கப்​பட்​டது.

2022-ம் ஆண்டு காலண்​டருக்​கான ஜி.எஸ்​.டி. வரி 18 சதவீத​மாக உயர்த்​தப்​பட்​ட​தா​லும், மூலப்​பொருட்​கள் விலை உயர்​வாலும் காலண்​டர் விலை 35 சதவீதம் உயர்ந்​த​தால் விற்​பனை பாதிக்​கப்​பட்​டது. மக்​கள​வைத் தேர்​தல் காரண​மாக அரசி​யல் கட்​சி​யினரின் ஆர்​டர்​கள் அதி​கரிப்​பால் 2024-ல் காலண்​டர் விற்​பனை விறு​விறுப்​பாக இருந்​தது. அதே​போல், அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரு​வ​தால் அரசி​யல் கட்​சி​யினரின் ஆர்​டர்​கள் காரண​மாக 30 சதவீதம் விற்​பனை அதி​கரிக்க வாய்ப்பு உள்​ளது. விலை​யில் பெரிய அளவில் மாற்​றம் வர வாய்ப்​பில்லை’’ என்று கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *