திமுகவின் தற்போதைய தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சிப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் சூடாக இருக்கும் அரசியல் களத்தை இந்த ஆடியோ மேலும் பரபரப்பாக்கியது.

“நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக பதவி பெற்ற – அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் அருகதையற்ற எடப்பாடி பழனிச்சாமி, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும் மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அவர்களைப் பற்றியும் தேர்தல் நேர அரசியல் ஆதாயத்திற்காக அவதூறாகப் பேசுவது அரசியல் அநாகரிகமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.
மகாகவி பாரதியின்” பாஞ்சாலி சபத’ வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன,
“ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.