ஆடி அமாவாசை: தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Dinamani2f2024 082f3c4c3e3c 87b0 429b 8e92 Bde99123f3312fwhatsapp20image202024 08 0420at207.46.5020am.jpeg
Spread the love

ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையில், தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.

கடலில் நீராடிய பின், முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

புதிய துறைமுகம் கடற்கரைக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *