"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்குநர் வெற்றிமாறன்

Spread the love

ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்’ மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் ‘ஆடுகளம்’ படம் குறித்து பேசியிருந்தார்கள்.

ஆடுகளம்
ஆடுகளம்

நான் `ஆடுகளம்’ படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரைதான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.

ஆனால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு தோன்றியது.

இப்படி ஒரு க்ளைமாக்ஸை எடுக்கும் தைரியம் இன்று நமக்கு வருமா என தெரியவில்லை என்று என் குழுவினரிடம் சொன்னேன்.

மற்றபடி ஆடுகளம் படம் தொல்காப்பியனை ஒரு புத்தகம் எழுத தூண்டி இருக்கிறது, இதனை எழுதியதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அந்த காலகட்டத்தில் ‘ஆடுகளம்’ படம் அரசியல் ரீதியாக சரியாக இருந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் பார்க்கும்போது அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் நிறைய இருக்கிறது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

அதனை விமர்சனத்திற்கு உட்படுத்த நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

குறிப்பாக அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம் என தோன்றும், ஆனால் அந்த நேரத்தில் அது நன்றாக இருந்தது என வைத்துவிட்டோம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *