ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு | Actress Khushbu, BJP members kept in a hall where goats were kept

1345665.jpg
Spread the love

மதுரை: மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் நீதி யாத்திரையை தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடிகை குஷ்பு உட்பட கைது செய்யப்பட்ட பாஜகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்கெனவே ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

மண்டபத்துக்கு பாஜகவினர் அழைத்து வரப்பட்ட பிறகும் வெளியே இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் மண்டபத்துக்கள் ஆடுகளின் சத்தமும், ஆடுகளின் கழிவுகள் காரணமாக துர்நாற்றமும் வீசியது.

இதனால் குஷ்பு மற்றும் பாஜகவினர் தங்களை வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டனர். வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி மண்டபத்துக்குள் இருந்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர். ஆடுகள் அடைக்கப்படும் மண்டபத்தில் தங்களை அடைத்து போலீஸார் அவமானப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *