ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

Dinamani2f2025 01 152f9dhcbn8d2fsalem.jpg
Spread the love

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, பொங்கல் பண்டிகைக்காக நீர் நிலையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். பொங்கல் நாளில் நேரிட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்த சம்பவம் குறித்து, குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி கிராமத்தில் வசிப்பவர்கள், தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை குளிப்பாட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படி ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராக்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்த, சங்கர் என்பவரின் 14 வயது புதல்வி ஸ்ரீ கவியும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் 9 வயது புதல்வன் பிரதீப் ராஜாவும், தாங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை குளிப்பாட்ட அருகில் உள்ள குட்டைக்குச் ஓட்டி சென்றனர்.

அவருடன் ஸ்ரீகவியின் தாத்தா ராஜேந்திரன் உடன் சென்றிருந்தார். ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஸ்ரீகவியும், பிரதீப் ராஜாவும் கால் தவறி தண்ணீரில் மூழ்கினர், இதனை கண்ட ராஜேந்திரன் கூச்சல் எழுப்பினார் . இதனையடுத்து அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *