ஆடு புலி ஆட்டம் காட்டும் தங்கம் : சவரனுக்கு ரூ. 800 குறைவு  – Kumudam

Spread the love

சர்வேத சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் தங்கம் விலை ஏற்றம் மற்றும் இறக்குத்துடன் நிலையில்லாமல் உள்ளது. 

நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று மாலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,770 – க்கும் விற்பனையானது. நேற்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம்  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *