ஆம்! ‘டோப்பல், ஏ.ஐ உதவியுடன் உங்கள் தோற்றம் புதிய புதிய ஆடைகளுடன் எப்படி இருக்கும் என்பதை ஸ்மார்ட் போனிலேயே காட்டுகிறது.
உங்களின் புகைப்படங்களை கூட வீடியோவாக மாற்றி, ஆடைகளைத் தேர்வு செய்ய மேலும் ஒரு சிறந்த அனுபவத்தையும் தருகிறது. பயனர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆடை புகைப்படத்தை பதிவேற்றுவது மட்டுமே.. மீதியை டோப்பல் செய்து விடுகிறது.
எப்படி இருக்கிறது இந்த ‘Google Doppl’?
முதலில் கூகுள் டோப்பலை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் தங்களின் கூகுள் அக்கவுண்டை வைத்து லாகின் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களின் உடலின் வகை, அளவு மற்றும் அவர்களின் விருப்பத் தேர்வுகள் உட்பட அவர்கள் கேட்கும் விவரங்களை வழக்கம்போல கொடுத்துவிடுவதாக இருக்கிறது.
இந்த விவரஙகளை வைத்து முதலில் அனிமேஷனாக உங்களின் அவதார் (avatar) உருவத்தை உருவாக்கிவிடுகிறது. பின்பு அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதன் புகைப்படத்தை அப்லோட் செய்தால் போதும். அது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்துகிறது.