ஆட்சியரைத் தாக்கிய சுயேச்சை வேட்பாளர்! கல்வீச்சு தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு!

Dinamani2f2024 11 142f4ids7pyp2fnaresh Meena.jpg
Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் துணை ஆட்சியரைத் தாக்கியதால் காவல்துறையினருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட 11 மாநிலங்களில் இடைத்தேர்தல் நேற்று(நவ.13) நடைபெற்றது.

அதேபோல ராஜஸ்தான் டோங் மாவட்டத்தில் தியோலி – உனியாரா மக்களவைத் தொகுதியில் சமரவதா கிராமத்தில் நடந்த சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா, துணை ஆட்சியர் அமித் சௌத்ரியின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துணை ஆட்சியர் கொடுத்த புகாரின் பேரின் காவல்துறையினர் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனாவை கைதுசெய்ய முயன்றனர்.

சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா

சுயேச்சை வேட்பாளர் துணை ஆட்சியரை கன்னத்தில் அறைந்ததும் காவல் துறையினருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு மோதல் வெடித்தது.

இதனால், போராட்டக்காரர்கள் காவல்துறையினர் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் பல வாகங்களுக்கு தீவைத்தனர்.

இந்தத் தாக்குதலில் அங்கிருந்த பல வாகங்களுக்கு தீவைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய 60 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் 8 கார்கள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிகளவிலான காவல்துறையினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா கூறுகையில், இந்தச் சம்பவத்துக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுப் பொறுப்பேற்க வேண்டும். கைது செய்யப்பட்ட 60 பேரும் ஒன்றுமறியதாவர்கள். யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் நீங்கள் என்னை தண்டிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டோங்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நரேஷ் மீனா வாக்குச்சாவடிக்குள் நுழைந்து துணை ஆட்சியரை உடல்ரீதியாக தாக்கியுள்ளார். இதனால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், சம்ரவதா கிராமத்தில் சிலர் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர்.

துணை ஆட்சியரைத் தாக்கிய நரேஷ் மீனாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *