ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த விடியோவை விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் வெளியிட்டுள்ளார்.
வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் சூழலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திமுக கூட்டணியில் விரிசலா? என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இது பொதுவான கொள்கை ரீதியான மாநாடு என கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுத்துள்ளது.
‘பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்’ – அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை!
இந்நிலையில், ‘கூட்டணி ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என கூறும் விடியோ ஒன்றை திருமாவளவன் இருமுறை வெளியிட்டு நீக்கியுள்ளார். தற்போது மீண்டும் இதனை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! – என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ” – என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..’ என்று கூறி விடியோவையும் பதிவிட்டுள்ளார்.
‘ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில்’ – யோகி ஆதித்யநாத் பேச்சு!
விடியோவில் கூறியிருப்பதாவது:
எதிர்த்துப் பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது, தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகள் இதனை கோரினார்களா என்று தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு.
1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது வைத்த முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே. கடைசி மனிதனுக்கும் ஜனநயாகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று பேசும் விடியோவை பதிவிட்டுள்ளார்.
நெய்வேலியில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போதுதான் இந்த முழக்கத்தை வைத்தேன், அதிகாரத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் என்று பேசியிருந்தார்.
இந்த விடியோவை முதலில் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். பிறகு அதனை நீக்கிவிட்டார். மீண்டும் அதனை பதிவிட்டு இரண்டாம் முறையும் அதனை நீக்கியிருக்கிறார்.