ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி உறுதி – Kumudam

Spread the love

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 லைட், ஆலந்தூர் ரோடு பகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,“அமமுக சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் செந்தமிழனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நல்ல பண்பாளர், வேறு கட்சி என்றாலும் இனிய நண்பர், அன்பாக பழகக் கூடியவர், நான் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தபோது, அவரது அறையில் தான் தங்கியிருந்தேன். தொகுதி மக்களுக்கு நல்லது செய்பவர், நல்ல எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர், அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. யார் அந்த சார்? அந்த சார் போய் குற்றவாளி வீட்டில் மூக்குபிடிக்க பிரியாணி சாப்பிட்டார். இப்படி இருந்தால் குற்றச் செயலை எப்படி தடுக்க முடியும்.? திமுகவைப் பொறுத்தவரை குற்றவாளிகளை காப்பாற்றுவார்கள்.  திமுகவைப் பொறுத்தவரை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகரத்தில் வடிகால் வசதி அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்தோம்,. பேஸ் 1, 2  என 1240 கிலோமீட்டர் அதிமுக ஆட்சியிலேயே முடித்தாகிவிட்டது. ஆனாலும், ஆக்கிய சாப்பாட்டை சாப்பிடுவது போல திட்டத்தை நிறைவேற்றவில்லை. மேயர் முதல்வர் அமைச்சர் எல்லோரும் மழை நீர் தேங்காது என்றனர். அதிமுக ஆட்சியில் நிதியை ஜப்பானின் ஜைக்காவில் இருந்து பெற்றுக்கொடுத்தோம் அப்படியிருந்தும் கமிஷனுக்காக திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால் மக்களுக்குத்தான் பாதிப்பு. மீண்டும் அதிமுக ஆட்சி வரும், முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் வேலை நடக்கவில்லை. வடிகால் வசதி செய்யாததால் தான், மழையில் பாதிப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. இதை அதிமுக அரசு மீட்டெடுக்கும். கூவம் ஆற்றுக் கரையோரம் 17,750 குடும்பம் இருந்தது, அவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தினோம். 48 கிமீ நிளமுள்ள கால்வாயை ரோபோடிக் எஸ்கலேட்டர் மூலம் தூர் வாரினோம். அடையாறு, கோவளம், கொசஸ்தலை ஆகிய பேசின்களை மூன்று பெரிய திட்டங்களை முடிக்கும் அளவுக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்தோம், அதை கிடப்பில் போட்டுவிட்டனர். என பேசினார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *