ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! – போக்குவரத்துத் துறை

Dinamani2f2024 10 132f2c890fdk2ftnieimport2023413originaluberolaautorickshaws.avif.avif
Spread the love

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 18 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் இரவு நேரங்களில் பயணித்தால் பகல் நேரத்தைவிட கூடுதலாக 50% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பிப். 1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இந்நிலையில் போக்குவரத்துத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

‘ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது.

ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்த முடியாது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்களுக்கு வழங்கப்படும்

புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *