2019ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 299 நிமிடங்களை பெண்கள் ஒதுக்கியிருந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து 2024-ல் 10 நிமிடங்கள் மட்டுமே பெண்களுக்கு குறைந்துள்ளது. அதாவது ஆண்களைக் காட்டிலும் 201 நிமிடங்கள் கூடுதலாக வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் பெண்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி – டிசம்பர் வரையிலான ஆய்வுக்குப் பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,
ஊதியமின்றி வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 62 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குகிறார்கள். பெண்கள் 137 நிமிடங்களை ஒதுக்கும் நிலையில், ஆண்கள் 75 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர். இதில் 15 – 59 வயது வரையிலான பெண்கள் ஈடுபடுகின்றனர்.
வீட்டு வேலைகளைச் செய்வதற்கு பெண்கள் 289 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இதே வேளையில் ஆண்கள் 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குகின்றனர்.