ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்

Dinamani2fimport2f20232f102f252foriginal2ferd06dogs 0611chn 124 3.jpg
Spread the love

சென்னை மாநகராட்சியின் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் நடத்தப்பட்ட நாய்கள் கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும். புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *