தலைவருக்கே விருப்பமில்லை
‘இப்படியொரு கூட்டணிக்கு செல்ல தலைவருக்கே விருப்பமில்லை. குறுகிய காலத்தில் அந்த கூட்டணி நல்ல பலனை கொடுப்பதாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் தன்னுடைய அரசியலுக்கே அது பிரச்னையாக அமையும் என தலைவர் நினைக்கிறார்’ எனக் கூறும் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள், ‘சூழலை உணர்ந்து நெளிவு சுழிவு அறிந்தே காய்களை நகர்த்த வேண்டும் என்பதால்தான் NDA வுக்கு நேரடியாக ‘நோ’ சொல்லவில்லை.
மாறாக, 90 சீட்டுகள் முதல்வர் பதவி என்றுதான் எங்களின் டிமாண்டையே முன்வைத்தோம். அதனால்தான் டெல்லி எங்களை கூட்டணிக்குள் இழுக்க முயன்றும் எடப்பாடி அதற்கான முன்னெடுப்புகள் எதையும் செய்யாமல் இருக்கிறார். 90 சீட்டுகள் + முதல்வர் பதவி என்பதே சுருக்கமாக ‘நோ’ தான் எடப்பாடி உணர்ந்திருக்கிறார்’ என்கின்றனர் அந்த நிர்வாகிகள்.

எப்படியும் கூட்டணிக்கு செல்லப்போவதில்லை என்பதை தன்னுடைய தொண்டர்களுக்கு கடத்தும் விதமாகத்தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போதே கார் மேல் ஏறி கையசைத்து வெற்றி முத்திரையை விஜய் காட்டி சென்றதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
விஜய் தலையை சுற்றி மூக்கை தொட்டு ‘நோ’ சொன்னாலும் டெல்லி மேலிடம் இன்னும் இந்த கூட்டணியை சாத்தியப்படுத்தி விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. ‘மார்ச் 30’ தான் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதுவரை விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க நேரமிருப்பதாக நினைக்கிறது பாஜக!