“ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' – அமைச்சர் ரகுபதி காட்டம்

Spread the love

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,

“பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால், அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால், ‘நானும் கட்சியில் இருக்கிறேன்’ என்பதை காட்டிக் கொள்ள, என்னை ‘பி டீம்’ என்று கூறியுள்ளார்.

நாங்கள் எது பி டீம், எது சி டீம், எது ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றம் கிடையாது. ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

நான் தி.மு.க-விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

எடப்பாடியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர். மாவட்டச் செயலாளர் தான். ஆனால், நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால், எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *