ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

Aadhar Card Update
Spread the love

ஒவ்வொருவரின் முக்கிய அடையாளமாக தற்போது ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு, அரசின் நலத்திட்டங்கள்,சலுகைகள் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார்அட்டை எண் முக்கியமானதாக ஆக்கப்பட்டு உள்ளது.

ஆதார் அடையாள அட்டை

Aadhar Card Services

முகவரி, செல்போன் எண் மாற்றம் , விரல்ரேகை பதிவதில் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ள ஆதார் அமைப்பு பயனாளர்களுக்கு கால அவகாசம் வழங்கும்.
இதற்காக ஏற்கனவே ஆதார் அடையாள அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 14 ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

3 வது முறையாக நீட்டிப்பு

இந்தநிலையில் ஆதார் அடையாள அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஏற்கனவே மத்திய அரசு இரண்டு முறை நீடித்த நிலையில், தற்போது பொதுமக்களின் வசதிக்காக 3 வது முறையாக நீட்டித்துள்ளது.

Aadhaar Logo.svg

இதன்படி ஆதார் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய விரும்பும்பயனாளர்கள் அதற்கான இணையதளம்அல்லது ஆதார் மையங்களுக்கு சென்று சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காலக்கெடு நிறைவடைந்த பிறகு அப்டேட் செய்யப்படாத ஆதார் அடையாள அட்டை ரத்து செய்யப்படமாட்டாது எனவும் ஆதார் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதையும் படியுங்கள்:

உத்தரகாண்ட் ஆற்றில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *