ஆதார் அட்டை: மோசடி, ஆள்மாறாட்டத்தைத் தடுக்க இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்; மத்திய அரசு அறிவிப்பு| Aadhaar card: Central government announces deletion of 2 crore Aadhaars of deceased to prevent fraud

Spread the love

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு ஆதார் தரவுகளை மாற்றியமைத்து இருக்கிறது. இறந்துபோன 2 கோடி மக்களின் ஆதார் தகவல்களை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், பொது வினியோகத்துறை போன்றவற்றுடன் இணைந்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

மோசடி, ஆள்மாறாட்டம், நலத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் இப்பெயர்கள் ஆதார் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவ்வாறு நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்த முடியாது என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

இதே போன்று இறந்தவர்கள் குறித்து உறவினர்கள் மை ஆதார் போர்டல் மூலம் தகவல் கொடுக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று இறந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டு இருந்தால் அதனையும் இறந்தவர்களின் வாரிசுகள் மை ஆதார் போர்டல் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்க தேச பிரஜைகள் சிலர் சட்டவிரோதமாக இந்தியாவில் ஆதார் கார்டு எடுத்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆதார் கார்டுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆதார் பதிவுகளில் நடப்பு தகவல்களைத் தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *