“ஆதிச்சநல்லூர் உலகளாவிய அளவில் மேம்படுத்தப்படும்” – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Spread the love

Last Updated:

“தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News18
News18

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

உள்கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபு சார் இடங்களாக மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “புனித நகரமான மதுரைக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். மதுரை மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தலை வணங்குகிறேன்.

10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேத்துறை பல சாதனைகளை படைத்துள்ளது. பாஜக ஆட்சியில் ரயில்வேக்கு தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 1,300 கி.மீ.க்கு அதிகமாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 9 வந்தே பாரத் மற்றும் அம்ரீத் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. சென்னை எழும்பூர் – கடற்கரை 4வது வழித்தடம் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2026 பட்ஜெட்டில் பெங்களூரு – சென்னை மற்றும் சென்னை – ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் காரிடாரை நாம் முன்வைத்திருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அமைச்சர் எ.வ. வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *