இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளாா். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினாா்’ என்றாா்.
ஆந்திரத்தில் 4 வயது சிறுமி பாலியல் கொலை
