ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

Dinamani2f2025 02 252fgcdz4voq2fchandrababu Naidu In Assembly Edi.jpg
Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 – 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சி 8.6% ஆக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் மாநில வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுப் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஆந்திர மாநிலத்தில் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 62,000 கோடியாக அதிகரித்துள்ளது.

2023 – 24 நிதியாண்டில் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில்) மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.6% ஆக இருந்தது. ஆனால், 2024 – 25 நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 13% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் 3 மாதங்களுக்குப் பிறகுதான் நாம் ஆட்சி அமைத்தோம். இந்தக் குறுகிய இடைவெளியில் நாம் இதனைச் செய்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 16.06 லட்சம் கோடியாக இருக்கும்.

2018 – 19 நிதியாண்டில் முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில் 11.4% ஆக இருந்த வளர்ச்சி விகிதம், ஜெகன் மோகன் ஆட்சியில் அடுத்த ஆண்டிலேயே 5.25% ஆக குறைந்தது. 2019 – 20 ஆட்சியில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 45,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 9.71 லட்சம் கோடியாக இருந்திருக்கும். ஆனால் தற்போது ரூ. 9.26 லட்சம் கோடியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *