ஆந்திரம் மாநிலம் ஏலூரு அருகே மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.
டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து முந்திரி கடலை ஏற்றிக் கொண்டு நிடடவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி, தேவரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக லாரியை திரும்பியபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.