ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் சுற்றுலா சென்றிருக்கின்றனர்.
அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளனர்.

இதில் திரிஷா (17), ரத்னகுமாரி (16), பவித்ரா (16) ஆகிய மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
இதில் ஒரு பெண் மட்டும் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், மீட்புப் பணிகள் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் போலீஸாரும் உள்ளூர் மக்களும் இணைந்து சிறுமிகளின் உடல்களை மீட்டனர். செல்ஃபி மோகத்தால் இளம் வயதில் மாணவிகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.