ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது.

வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர்.
வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.