திருப்பூர்: ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞரில் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 24-ம் தேதி அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மோதியதில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர், பைக்கை ஒட்டி வந்தவர் என மொத்தம் 20 பேர் உடல் உயிரிழந்தனர். மொத்தம் 43 பேர் பயணம் செய்ததில் பேருந்து ஓட்டுநர் உட்பட மற்றவர்கள் அனைவரும் சிறு காயத்தோடு உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் திருப்பூர் தோட்டத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரி ராஜா என்பவரது மகன் யுவன் சங்கர் (22) உடல் கருகி உயிரிழந்தார். யுவன் சங்கர் ராஜ் ஹைதராபாத்தில் உள்ள மருந்து ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றினார். தீபாவளி பண்டிகை க்கு விடுமுறை கிடைக்காததால், தீபாவளிக்கு பிறகு 23-ம் தேதி ஊர் திரும்பி உள்ளார். இவர் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் வந்து அங்கிருந்து சேலம் வருவதாக இருந்தது. இந்த நிலையில் இவரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்பு யுவன் சங்கர் உடல் உறுதி செய்யப்பட்டு உடலானது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தனி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் கொண்டுவரப்பட்டது.
யுவன் சங்கர் உடலானது சிறிது நேரம் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் இன்று (அக்.27) காலை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுத காட்சி அங்கு காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.