ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

Spread the love

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆனந்தபோஸ் டெல்லியில் இருக்கிறார். ஆளுநரின் ராஜினாமா குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ”அவர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை.

ஆனந்தபோஸ்

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய மத்திய உள்துறை அமைச்சரின் சில நிர்ப்பந்தத்திற்கு ஆளுநர் உட்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேற்கு வங்க ஆளுநராக ஸ்ரீ ஆர்.என். ரவி நியமிக்கப்படுகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில்தான் எனக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக மரபுப்படி அவர் என்னிடம் ஒருபோதும் ஆலோசனை நடத்தவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன. மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைகளை மதிக்க வேண்டும், மேலும் ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். ஆனந்த் போஸ் 2022ம் ஆண்டில் இருந்து இப்பதவியில் இருந்து வருகிறார். இது குறித்து ஆனந்த் போஸ் அளித்த பேட்டியில், `போதிய அளவு இப்பதவியில் இருந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *