சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.
முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் இளம் வாசகர்கள், இந்நூல்களை ஆர்வத்துடன் தேடுகின்றனர். இந்தச் சூழலில், மணி பேச்சு (money pechu) யூடியூப் சேனல் நிறுவனர் மற்றும் முதலீட்டு எழுத்தாளர் ஆனந்த ஶ்ரீனிவாசன் பங்குச் சந்தையை புரிந்துகொள்ள வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை விளக்கினார்.
முதலீட்டை தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு, சரியான நூல்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“தொடக்க நிலையில் உள்ளவர்கள் முதலில் பீட்டர் லிஞ்ச் (peter lynch) எழுதிய Learn to Earn, One Up on Wall Street, Beating the Street ஆகிய நூல்களை வாசிக்க வேண்டும்” என்றார்.
“இந்நூல்கள்பங்குச் சந்தையின் அடிப்படை செயல்முறைகளை எளிய மொழியில் விளக்குகின்றன என்றும், முதலீடு செய்யும் முறையை புரியவைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.