ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami insists for annamalaiyar-nallaru project should be implemented

1376192
Spread the love

உடுமலை: கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று அதி​முக பொதுச் செயலாளர் பழனி​சாமி கூறி​னார். பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அடுத்த மடத்​துக்​குளத்​தில் அவர் பேசி​ய​தாவது: ஆனைமலை ஆறு – நல்​லாறு அணை திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்​பது கோவை, திருப்​பூர் மாவட்ட மக்​களின் நீண்​ட​கால கோரிக்​கை. தமிழகத்தை ஆளும் திமுக​வும், கேரளாவை ஆளும் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் இண்​டியா கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கின்​றன. எனவே, கேரள அரசிடம் தமிழக முதல்​வர் பேச்​சு​வார்த்தை நடத்​தி, தீர்​வு​காண வேண்​டும்.

விவ​சா​யிகளுக்​கும், விவ​சா​யத் தொழிலா​ளர்​களுக்​கும் திமுக துரோகம் இழைத்து வரு​கிறது. தமிழகத்​தில் அதி​முக ஆட்​சி​யின்​போது குடிம​ராமத்து திட்​டத்​தின் கீழ் 26,000 குளம், குட்​டைகள் தூர் வாரப்​பட்​டன. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் தாலிக்கு தங்​கம் திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டு, மணமகளுக்கு பட்​டுச்​சேலை​யும், மணமக​னுக்கு பட்டு வேட்​டி​யும் வழங்​கப்​படும்.

தமிழகத்​தில் ஏழை மாணவர்​கள் கல்விக்​காக ரூ.7,200 கோடி​யில் 52 லட்​சம் பேருக்கு மடிக்​கணினி வழங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்தை திமுக அரசு ரத்து செய்​து​விட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் இத்​திட்​ட​மும், மடத்​துக்​குளம் தொகுதி விவ​சா​யிகளின் நீண்​ட​கால கோரிக்​கை​யான அப்​பர் அமராவதி அணை திட்​ட​மும் நிறைவேற்​றப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *