இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். மேலும், அவதூறு கூறப்பட்ட காலத்தில் விற்பனையில் சரிவு ஏற்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், எதிர்மறையான விமர்சனத்தால் பொருளுக்கு நற்பெயர் ஏற்பட்டதாகவும், வியாபார நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நிலையில், இழப்பீடாக 70,000 திர்ஹாம் (இந்திய மதிப்பின்படி ரூ. 16 லட்சம்) வழங்க உத்தரவிட்டது.
ஏற்கெனவே, 2024 ஆம் ஆண்டு இதேபோன்ற வழக்கில், எதிர்மறையான விமர்சனத்தை பதிவிட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் துபை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.