ஆன்லைனில் ரூ 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னைவாசி  – Kumudam

Spread the love

இந்தியர்கள் ஆன்லைனில் எந்தந்த பொருட்கள் வாங்கப்படுகிறது என பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. 

உலகம் முழுவதும் பொருட்களை கடைக்கு சென்று நேரில் வாங்குவதை விட, ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியர்களிடம் இந்த பழக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. 

சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும்.

ஒவ்வொரு ஆன்லென் ஆர்டரிலும்  127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானம் வாங்க ரூ.16.3 லட்சம் செலவிட்டு உள்ளார். 

இதேபோல சென்னையை சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களுக்கு மட்டும் ரூ.2.41 லட்சம் செலவு செய்திருக்கிறார். பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *