சரி… அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம்.
> ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும்.
> Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
> Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.
> ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.

> அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும்.
> Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்… எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, “Book Now’-ஐ கிளிக் செய்யுங்கள்.
> அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும்.
ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.