ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க ஆதார் கார்டில் என்னென்ன செய்யக்கூடாது?|Aadhaar on Apps? Follow These 5 Tips to Stay Scam-Free

Spread the love

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம்.

ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ…

1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள்.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள்.

3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார்.

4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும்.

5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *