மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சௌத்ரி(54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர், வலைத்தளம் ஒன்றில் முதலீடு செய்தால் அதிக வருமான ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய ஆசிரியை சுனிதா சுமார் 50 நாள்களில் அதில் ரூ.66 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.
பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் முதலீட்டையும் அதனுடைய லாபத்தையும் அந்த நபரிடம் ஆசிரியை கேட்டுள்ளார்.