பெங்களூரு: பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அடிக்கல்லை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஆரஞ்சு லைன் என்றழைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்துக்கு ரூ. 15,600 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி: “ஆபரேஷன் சிந்தூரில் இந்திய படைகள் வெற்றி வாகைச்சூட, பாதுகாப்பு துறையில் நம் நாட்டின் தொழில்நுட்ப ஆதிக்க திறனாலும் ‘மேக் இன் இந்தியா(உள்நாட்டு தயாரிப்பு)’ முன்னெடுப்பின் வலிமையாலும் கிட்டியது.”
“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியானது “புதிய இந்தியாவை” உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது. பயங்கரவாதிகளை பாதுகாக்க வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்திலேயே மண்டியிடச் செய்ய வலுக்கட்டாயப்படுத்திய இந்தியாவின் வலிமையை வலியுறுத்தியிருகிறது இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்” என்றார்.