ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு: இரட்டை சகோதரர்கள் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார் – Kumudam

Spread the love

தமிழ் திரையுலகில் டப்பிங் மற்றும் நடிப்பு என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை ரவீனா ரவி . லவ் டுடே ஒரு கிடாயின் கருணை மனு வீரமே வாகை சூடும், மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகையாக பிரபலமானவர் மேலும் பல திரைப்படங்களில் பின்னணி குரல் மூலமாகவும் இவர் பிரபலமடைந்தவர் ஆவார் . இவர் பிரபல பின்னணி குரல் கலைஞர் மற்றும் நடிகையுமான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இந்த நிலையில், நடிகை ரவீனா தான் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை , நண்பர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் ஒரு நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சபரீ ஷ் மற்றும் அவரது இரட்டை சகோதரர் கொடுக்கும் தொந்தரவு தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் எச்சரித்தாலும் , தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சபரீஷ் மற்றும் அவரது இரட்டையர் சகோதரரும் தொடர்ந்து என்னை மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆன்லைனில் துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் கருத்துகளில் மிகவும் அருவருப்பான. அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தி என்னையும் மற்றும் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதற்கு  மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

சட்டபூர்வமான வழிகளின் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்ற போதிலும், இந்த தொந்தரவு இன்னும் நிற்காமல் தொடர்ந்து நடைபெறுவதாக கூறியுள்ளார். அந்த நபர் பல்வேறு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி, என்னை மட்டுமின்றி பிற பெண் நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்களையும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் தன்னை சந்தித்ததாகவும் தங்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட தாக பொய்யான தகவல்களை உருவாக்கி, பெண்களை மனதளவில் அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இனி மௌனம் காக்க முடியாது என்பதால், இந்த பிரச்சினையை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வந்து. சபரீஷ் மற்றும் அவரது சகோதரரின் சமூக வலைதள கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவல்கள் அல்லது செய்திகள் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை அழைக்கப்படுகிறது.அனைவருக்கும் இந்த நகரம் உண்மையில் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்த பதிவின் மூலம் தமிழக முதல்வர், சென்னை காவல்துறை மற்றும் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் சமூக வலைதள கணக்கை இணைத்து இந்த பதிவை நடிகை ரவினா ரவி வெளியிட்டுள்ளார். நடிகை ரவீனா ரவியின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *