ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் வெள்ளத்தில் மூழ்கினர்.
200 பேர் பலி
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 200 ஐ தாண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறி உள்ளது.
அங்கு நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் குழுவினர் அவசரகால நிலையை அறிவித்து விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் , விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து உள்ளன. பல இடங்கள் தண்ணீர் சூழ்ந்தும் , சகதியுமாக காணப்படுவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பாக்லான் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள்தெரிவித்து உள்ளன.
மீட்பு பணி
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் வெளியிட்ட அறிவிப்பில் “நூற்றுக்கணக்கான நமது சக குடிமக்கள் இந்த பேரிடர் வெள்ளத்தில் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்து உள்ளார்.