சென்னை: பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய் ஜீனத் உசேன் (90). வயதுமூப்பு பிரச்சினையால் இவருக்கு உடல்நல குறைவு ஏற்படுவதால், சில மாதங்களாக சென்னையில் தங்கி அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.