இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் இன்று(ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடந்தது. அதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தலித் கூட்டமைப்பிரிவினர், சமூக செயல்பாட்டாளர்கள், மேலும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பிலிருந்தும் சுமார் 500 பேர் ரமணா ஹோட்டல் அருகிலிருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக நடந்து சென்றனர். இதையொட்டி, பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் பேரணி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாதென அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, விசிக உறுப்பினர்கள் யாரும் இன்றைய பேரணியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.