ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் மூவரை கைது செய்தது காவல்துறை

Dinamani2f2024 072f112c3427 73cd 4392 8dd2 Eb076313ab172fams.jpg
Spread the love

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் நரேஷ், சீனிவாசன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்த எண்களை விசாரணை நடத்தியும், பெரம்பூர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் பந்தா்காா்டன் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரரான ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அருள், செல்வராஜ், சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 11 பேரைக் கைது செய்தனா்.

கைதான 11 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இவர்களை 5 நாள்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *