பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 28 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ரௌடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில்தான், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் வேறு சில காரணங்களும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பவை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் தனித்தனி வாக்குமூலங்களின் அடிப்படையில் 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த கொலை வழக்கில் கைதானவர்களில் சிலர் சாட்சிகளாக மாறி உள்ளதாகவும், அவர்கள் அளித்த வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.